தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 10, 2012

கொசுக்களை உற்பத்தி செய்யவா நகராட்சி?




புகாருக்குப் பின் தங்கம் நகரில் திரு பூராசாமியின் காலி மனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்


புகாருக்கு முன் சாலையில் வழிந்தோடிய கழிவு நீர்.

விருத்தாசலம் பெரியார் நகரும் தங்கம் நகரும் அருகருகே அமைந்துள்ள புறநகர்ப் பகுதிகள். பெரியார் நக்ரின் முதன்மைச்சாலையான அண்ணாசாலையானது கடலூர் சாலையையும் சிதம்பரம் சாலையையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலையாகும். இச்சாலை தங்கம் நகர் வழியாகத்தான் செல்கிறது.ஆனால் சுமார் 30 அடி நீளம் இணைப்புச்சாலை அமயவேண்டிய இடத்தில் திரு. பூராசாமி என்பவரின் காலி மனை உள்ளது.குடியிருப்போர் நலச்சங்கங்கள் அவரிடம் பேசி இணைப்புச் சாலை அமைக்கத்தேவையான இடத்தினை நகராட்ச்சிக்கு தானமளிக்கச் செய்தோம். நகராட்ச்சிக்கு சாலை அமைக்கத் தனது வீட்டுமனையில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதில் சாலையும் அமைக்கப்பட்டது. இந்த இணைப்புச்சாலைக்கு வடக்கிலும் தெற்கிலும் கழிவு நீர்க் கால்வாய் உள்ளன. அவை இரண்டு கால்வாய்களையும் இணைத்தால்தான் கழிவு நீர் சாலையில் ஓடாமல் கால்வாயில் ஓடும். இக்கோரிக்கையினை இடத்தை தானம் செய்த போதே அப்போதைய நகராட்சி ஆணையர் திரு. திருவண்ணாமலை அவர்களிடம் முன் வைத்தோம். முதலில் சாலை அமையட்டும் அடுத்து கால்வாய் அமைக்கலாம் என கூறியவர் மாறுதலாகி சென்று விட்டார். அதன் பிறகு பொருப்புக்கு வந்தவர்களுக்கு இந்த வரலாறு தெரியவில்லை. காலங்கள் ஓடின கால்வாய் அமைக்காததனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது .இது குறித்து பல முறை புகாரளித்தோம். நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவே வேறு முயற்சியில் இறங்கினோம். மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என எல்லா இடத்திலும் புகார் கொடுத்தோம் செய்தித்தாளில் இது பற்றி செய்தி வெளிவந்தது. நகராட்சியிலிருந்து பார்வையிட்டு சாலையில் வழிந்தோடிய சாக்கடை நீரை இணைப்புக் கால்வாய் அமைத்து தங்கம் நகர் கால்வாயில் விடுவார்கள் என்று நினைத்தோம். யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிவினை நகராட்சி நிர்வாகம் எடுத்தது.அந்த முடிவுதான் சாலைக்கு இடம் தந்த பூராசாமியின் காலிமனையில் சாக்கடையை விட்டு நிரப்புவது .அதன் மூலம் கொசுக்களை உற்பத்தி செய்து மக்களுக்கு தொற்று நோயைப் பரப்புவது.முதலமைச்சர் தனிப்பிரிவுக்கா புகார் செய்தீர்கள் உங்களுக்கு இதுதான் தண்டனை.என்பது போல் உள்ளது நகராட்சியின் செயல்பாடு.
ஐயா அதிகாரிகளே பொது மக்களுக்கு நீங்கள் செய்யும் தொண்டு இதுதானா? ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் வசிக்கும் பகுதிக்கு உடனே சாலை அமைக்கின்றீர்கள் கழிவு நீர்க் கால்வாயும் அமைக்கிறீர்கள்.அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இதுபோல் கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறீர்களே இது நியாயமா?  சாலைக்கு இடம் தந்தால் சாக்கடைதான் பரிசா?


Friday, December 7, 2012

கணையாழி விமர்சனக்கூட்டம்


கணையாழி விமர்சனக்கூட்டம்



நாள் : 9.12.12 காலை 10.00 மணி

இடம் : வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பூதாமூர்,   விருத்தாசலம்.

வரவேற்பு : இரத்தின புகழேந்தி

முன்னிலை : கோ.பாக்யராஜ்

தலைமை : இமையம்

விமர்சனம் : கரிகாலன், ரவிகார்த்திகேயன்,செந்தில்வேலன், அசதா, காலபைரவன், அமலநாயகம், தேவராஜ், அமிர்தராஜ், அண்ணாதுரை.

சிறப்புரை : ம.இராசேந்திரன் ஆசிரியர் கணையாழி,(மு) துணைவேந்தர்,த.ப.க., தமிழ் வளர்ச்சித்துரை இயக்குநர்.

நன்றியுரை : கனகராஜ்

நிகழ்ச்சி ஏற்பாடு : திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம்.

அனைவரும் வருக

Friday, November 30, 2012

நாட்டுப்புற இலக்கியம் அறிவோம்




சுட்டிவிகடன் வழங்கும் சுட்டித்தமிழ்.வானொலியில் நாட்டுப்புற இலக்கியம் அறிவோம் என்னும் தலைப்பில் டிசம்பர் 1 முதல் 15 வரை தினம் ஒரு சுவாரசியமான தகவல்களைத் தருகிறார் நாட்டுப்புறவியலாளர் முனைவர் இரத்தின புகழேந்தி.
தாலாட்டுப்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள் நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நகைப்புகள் என குவிந்துகிடக்கும் நட்டுப்புற இலக்கியங்கள் பற்றி கேட்க 044 66802905 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். சாதாரணக் கட்டணமே.

Sunday, November 4, 2012

மலேசியாவில் 10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு



முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்றது.  இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன.  பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம் ஆண்டு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்குத் தமிழ்க்கல்வி குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.


மாநாட்டின் நோக்கம்

1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல்.

2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.

3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல்.

4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல்.


Objectives of the Conference

1.To plan for developments in the teaching and learning of Tamil Language.

2.To explore the use of innovative approaches, and Information and Communication Technology resources for the teaching and learning of Tamil Language.

3.To facilitate the exchange  of views and promote sharing of ideas among Tamil Language teachers from around the world.

4. To promote networking and professional collaboration between Tamil Language educationist from various countries.


ஆய்வுக் கட்டுரைகள்


கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் படைக்கப்படும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் 120 சொற்களுக்குள் அமைதல் வேண்டும்.
ஒருங்குறி (Unicode) முறையில் தட்டச்சு செய்து 15.12.2012ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.


கட்டுரை தேர்வுக்குழுவின் முடிவுகள் சம்பந்தப்பட்ட பேராளர்களுக்கு 15.01.2013ஆம் நாளுக்குள் தெரிவிக்கப்படும்.
முழு வடிவம் கொண்ட ஆய்வுக்கட்டுரையைத் தட்டச்சு செய்து 28.02.2013 தேதிக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.
பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன

1. கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
       - ஊடகங்களின் தாக்கம்
      - தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு
      - புதுக்கோட்பாடுகள் , Language Teaching Learning Methods ( LTLM )

2. தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்வோர்க்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

3. பிறமொழி மாணவர்கள் தமிழை எளிமையாக கற்றுக் கொள்வதற்கான பயிற்று முறைகள்/நடவடிக்கைகள்

4. புலம்பெயர்ந்த நாடுகளில்/சூழலில் தமிழ்க் கல்வி

5. பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் தமிழ்க் கல்வியின் பங்கும் பணியும்

6. தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் மதீப்பீட்டில் புதிய அணுகுமுறை

7. தமிழ்மொழிப் பயன்பாட்டில் கருத்தாடல் திறன் வளர்த்தல்

கட்டுரைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
Email : mail@worldtamilteachersconf.org

Contact Address:

10 th World Tamil Teachers Conference
C/O Department of Malaysian Languages & Applied Linguistics,Faculty of Languages and Linguistics
University of Malaya,
50603,Kuala Lumpur

Contact Details:
Chairman: 03-79673142
Secretary: 03-87331590
Tel: 603-7772 1 714
Fax: 603-7967 3 142

 http://www.worldtamilteachersconf.org/default.aspx

நன்றி :http://muelangovan.blogspot.in/2012/11/10.html

Tuesday, October 2, 2012

சபர்மதி ஆற்றங்கரையில்..

                                            காந்தி ஆசிரம நுழைவாயில்
                                          காந்தி ஆசிரமம் முதன்மைக் கட்டடம்
                                                            சிறுவர்களுடன் காந்தி

                                                     சபர்மதி ஆர்ர்ங்கரையில்
                                     கை ராட்டையில் நூல் நூற்க முயற்சி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச்சென்றனர்.அதில் மும்பை அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காந்தி ஆசிரமம் சென்றோம். அவரின் பல நினைவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக அந்த இடம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. காந்தி சிறப்பானதொரு இடத்தைத்தான் தேர்வு செய்துள்ளார்.விடுதலைப்போர் குறித்த முக்கிய முடிவுகள் பல அங்குதான் எடுக்கப்பத்துள்ளன. அவரின் அறை மூடிவைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டு மக்களின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவர்பயன்படுத்திய மரப்பொருள்களும் கை ராட்டையும் அங்கு உள்ளன. நூலகம் ஒன்றும் உள்ளது காந்தியின் அனித்து நூல்களும் அங்கு விற்கப்படுகின்றன. பலவற்றை வணிகமாக்கிவிட்டனர் அங்கு. நீண்ட நாட்களாக்ப்பார்க்க எண்ணிய இடம் இப்போதுதான் வாய்த்தது அதுவும் அரசாங்கத்தின் புண்ணியத்தில்.விடுதலைப்போராட்ட்வீரர் கடலூர் அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி என்கிற அம்மாக்கண்ணு இங்குதான் வளர்ந்தாராம். காந்தி அவரைச் சிறு வயதில் தமிழ்கத்திலிருந்து அழைத்து வந்தார் என அவரின் குடும்பத்தினர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காந்தியுடனிருக்கும் குழந்தைகளில் அவர் எந்த குழந்தையோ.  

Saturday, September 29, 2012

புதிய மதிப்பீட்டு முறை


கல்வித்துறையில் ஒரு அமைதிப்புரட்சி புதிய மதிப்பீட்டு முறை மூலம் ஏற்பட்டிருக்கிறது. அனாலும் இது இன்னும் செழுமைப்படுத்தப்படவேண்டும் இது குறித்து சுட்டி விகடன் கவனம் செலுத்தி வருகிறது அதற்கு முன்னோட்டமாக ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர் அதில் அடியேனின் சில எளிய கருத்துகளை வெளியிட்டுள்ளனர் அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. இது குறித்த மேலும் சில தகவல்கள் அடுத்தடுத்த இடுகைகளில்...

Saturday, September 1, 2012

விருத்தாசலம் பெரியார் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்.




விருத்தாசலம் நகராட்சியில் ஒரு முக்கிய புற நகர் பெரியார் நகர் ,நகரத்தின் முக்கிய நபர்களில் பலர் இந்த நகரில்தான் வசிக்கின்றனர். நகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டித்தருவதும் இந்த பெரியார் நகர்தான். இங்குதான் இந்த அவலம். பூதாமூர் துணைமின் நிலையம் பின்புறம் அமைந்துள்ளது தங்கம் நகர்,இது பெரியார் நகரின் விரிவாக்கம். இந்நகரில் அமைந்துள்ள முதன்மைச் சாலை, சிதம்பரம் சாலையையும் கடலூர் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மின்கட்டணம் செலுத்தும் மக்கள் அனைவரும் இச்சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். பல பள்ளி வாகனங்கள் தினமும் இச்சாலை வழியே செல்கின்றன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். இச்சாலைக்குத் தேவைப்படும் கூடுதல் இடத்தை 21.09.2010 அன்று முறையாக நகராட்சிக்கு தானமளித்து பத்திரப் பதிவு செய்துகொடுக்கப்பட்டது. இது பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள்,நகராட்சி ஆணையர், நகராட்சி அலுவலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெற்றது. அதன் பிறகு சாலை விரிவக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.அதில் செல்லும் வாகனங்கள் கழிவு நீரை, நடந்து செல்வோர் மீது  பீய்ச்சியடித்து நாள்தோறும் மக்களை கழிவுந்நீர்க் குளியலுக்கு ஆளாக்குகின்றன. மேலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நகரில் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகர்மன்றத்தலைவரிடம் பல முறை சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. என்னதான் நடக்கிறது நகராட்சியில். இதற்கு விடிவுகாலமே இல்லையா? இன்னும் அடிப்படை வ்சதிகளைக்கூட நிறைவேற்ற இயலாத நிர்வாகமாகத்தான் இருக்கிறது விருத்தாசலம் நகராட்சி. வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லை.

Sunday, August 12, 2012

விடுதலைப் போராட்ட வீரர் க.ரா.ஜமதக்னி




1903-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கடப்பேரி என்னும் கிராமத்தில், ராகவன்-முனியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். வாலாஜா அருகிலிருந்த கிராமத்துப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். வேலூர், ஊரிஸ் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை 1926-இல் முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இடைநிலை கலையியல் பட்டம் பெற்றார்.
 ÷பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஜமதக்னிக்கு, ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியா முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த உணர்வின் தாக்கத்தால், காங்கிரஸ் இயக்கத்தின் மீது தீவிர பற்றுகொண்டார்.
 ÷கல்லூரி படிப்பை முடித்தவுடன் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது வேலூர் கோட்டையின் மீது கல்வீசி வன்முறையில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் காவல் துறை அவரை 1926-ஆம் ஆண்டு முதன் முறையாகக் கைதுசெய்து, ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது.
 ÷விடுதலைப் போராட்ட வீரர் ஆக்கூர் அனந்தாச்சாரியார் 1968-இல் எழுதி வெளியிட்ட "அரசியல் நினைவு அலைகள்' என்ற நூலில், நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஜமதக்னி எவ்வளவு துடிப்போடு செயல்பட்டார் என்பதை விளக்கியுள்ளார்.
 ÷இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜமதக்னிக்கு பிரிட்டிஷ் அரசு ஓராண்டு ஒரு மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்து விடுதலை அடைந்த ஜமதக்னியை, 1928-இல் பிரிட்டிஷ் அரசு ராஜ துரோக குற்றத்தைப் பொய்யாகச் சுமத்தி ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி லாகூர் சிறையில் அடைத்தது.
 ÷சிறையில் இருந்து வெளிவந்த ஜமதக்னி தொடர்ந்து பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று, ஓராண்டு சிறைத் தண்டனையைப் பெற்றார்.
 ÷இக்காலக்கட்டத்தில்தான் சிறையில் இருந்த பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலரை முதன்முதலாக சந்தித்தார். ""சிங்காரவேலரோ தனக்கு தரப்பட்ட மாமிச உணவை எனது வயிற்றுப் பசிக்கு அன்புடன் அளித்தார். அறிவுப் பசிக்கோ மார்க்சிய உணவை அளித்தார். இந்தப் பயிற்சியே மார்க்சிய நூல்களை முறையாகக் கற்கும் பக்குவத்தை எனக்கு அளித்தது. சிறையில் இருந்த மற்ற தலைவர்களுக்குப் பிற்காலத்தில் மார்க்சிய வகுப்புகளை எடுப்பதற்கு வழிவகுத்தது. "மூலதனம்', "மிகை மதிப்பு' நூல்களைத் தமிழில் முழுமையாக மொழியாக்கம் செய்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியது'' என்று கூறியுள்ளார் ஜமதக்னி.
 ÷சிறையில் இருந்து வெளிவந்த சில மாதங்களிலேயே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு, ஓராண்டு சிறைத்தண்டனைப் பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1939-இல் இந்திய பாதுகாப்பு விதியின்படி கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் வேலூர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார். அப்போது பெருந்தலைவர் காமராஜரும் இவரும் பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தனர். 1975 ஜூன் மாதத்தில் தலைவர் காமராஜரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, காமராஜர், ""ஜமதக்னிதான் எனக்கு மார்க்சியம் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்'' என்று நினைவுகூர்ந்துள்ளார்.
 ÷மீண்டும் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தார். அப்போது சம்ஸ்கிருதம், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளைக் கற்றார். இதுகுறித்து ஜமதக்னி குறிப்பிடுகையில், ""மூதறிஞர் ராஜாஜி, சிங்காரவேலர், டாக்டர் இராசன், பட்டாபி சீத்தாராமையா, பலுசு சாம்பமூர்த்தி, ஈ.எம்.எஸ். நம்பூதிபாட், ஏ.கே.கோபாலன், கொண்டா வெங்கடசுப்பையா, காளா வெங்கட்ராம், அன்னபூர்ணய்யா ஆகியோருடன் சிறையில் இருந்தமையால் பல மொழிகளையும் கற்பதற்குத் தனக்கு வாய்ப்பு ஏற்பட்டது'' என்று அடிக்க நினைவுகூர்வார்.
 ÷சம்ஸ்கிருத மொழியை முழுமையாகக் கற்றுணர்ந்த அறிஞர்களில் ஜமதக்னியும் ஒருவர். காளிதாசரின் மேகசந்தேசம், ரகுவம்சம் ஆகிய நூல்களைத் தமிழில் கொண்டு வந்த பெருமைக்குரியவர். புகழ்பெற்ற ஜெய்சங்கர் பிரசாத் இந்தியில் எழுதியுள்ள "காமாயிணி' என்னும் காப்பியத்தை, தமிழில் "காமன் மகள்' என்று மொழிபெயர்த்து வழங்கினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் தலைமறைவாய் வாழ்ந்த தனக்கும், தனது தோழர்களுக்கும் பணம் தேவைப்பட்ட போது, திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குமரேச சதகம் ஆகிய நூல்களுக்கு விளக்க உரை எழுதி வருவாய் ஈட்டினார்.
 ÷1938-இல் சோஷலிஸ்ட் கட்சி உருவானபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து இக்கட்சி தமிழகத்தில் உருவாவதற்குப் பெரிதும் பாடுபட்டார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் அதன் நிறுவன உறுப்பினரானார். அக்கட்சியின் வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றினார். 1938-ஆம் ஆண்டில் மார்க்சியம், நீ ஏன் சோஷலிஸ்ட் ஆனாய்?, இந்தியாவில் சோஷலிசம் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார். இதற்காக சிறைத் தண்டனையையும் பெற்றார். கம்பனுடைய சில முக்கிய பாடல்களைத் தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
 ÷1947-இல் இந்தியா விடுதலை பெற்றபின், ஜமதக்னி தனது வாழ்நாளை எழுத்து, இலக்கியப் பணிகளுக்கு செலவிட்டார்.
 ÷ஜமதக்னியின் குடும்ப வாழ்க்கை சிறைத் தொடர்பு கொண்டதுதான். கடலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளை சிறையில்தான் சந்தித்தார். அவரின் மகள்தான் அம்மாக்கண்ணு. இந்த அம்மாக்கண்ணுவின் பெயரை காந்தியடிகள் லீலாவதி என மாற்றினார். பின்னாளில் அஞ்சலையம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அஞ்சலை அம்மையாருக்கு அளித்த வாக்குப்படி விடுதலைப் போராட்ட வீரர் லீலாவதியை 1942-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் (சிவாஜி), இரு மகள்களும் (கிருபா, சாந்தி) பிறந்தனர் (கட்டுரையாளர் பேராசிரியர் மு.நாகநாதனின் மனைவிதான் முனைவர் சாந்தி). மகன் சிவாஜி, மகள் கிருபா ஆகிய இருவரும் மறைந்து விட்டனர்.
 ÷1981-இல் தனது பயணத்தை முடித்துக் கொண்டார் ஜமதக்னி. அவரின் பல படைப்புகள் இன்னும் வெளியிட வேண்டியுள்ளன. ஜமதக்னியின் சிந்தனைப் பயணம் தொடர்கிறது...
 ÷1998-ஆம் ஆண்டு க.ரா.ஜமதக்னி மொழிபெயர்த்த மூலதனம் மற்றும் மிகைமதிப்பு நூல்களுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஐந்து லட்சம் உதவி வழங்கிச் சிறப்பித்தது.

நன்றி : பேராசிரியர் மு. நாகநாதன்.
தினமணி

Saturday, June 30, 2012

நாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா?





புதுவை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வழக்கம்போல கவலை தெரிவித்துள்ளார். 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டிய நிலையில் 2000 பேருக்கு ஒரு மருத்துவரே உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். நம் தமிழகத்தில் தற்போது சிவகங்கையில் தொடங்கியுள்ள கல்லூரியையும் சேர்த்து 18 மருத்துவக்கல்லூரிகளில் 2145 மாணவர்கள் இந்த ஆண்டிலிருந்து மருத்துவக்கல்வி பயில உள்ளனர். இது நம் நாட்டுக்குப்போதுமானது அல்ல என்பது பிரதமரே ஒப்புக்கொண்ட உண்மை. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரியை ஏன் அரசு திறக்கக்கூடாது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமா?


தினமணி செய்தி

First Published : 01 Jul 2012 12:25:38 AM IST
Last Updated : 01 Jul 2012 01:20:52 AM IST

 புதுச்சேரி, ஜூன் 30: இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.342 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள், பெண்கள் மருத்துவமனை, பயிலகம், விடுதி கட்டடங்களைத் திறந்து வைத்தும், முதுகலை, இளங்கலை முடித்த 311 பேருக்குப் பட்டங்களை வழங்கியும் அவர் சனிக்கிழமை பேசியது:
 நாட்டு மக்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறோம். சுகாதாரக் குறியீடுகள் மோசமாகத் தொடர்வதும், சிசு மற்றும் பிரசவகால மரணங்களும் கவலையளிக்கின்றன.
 பல ஆண்டுகளாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், இன்றைக்கும் மருத்துவச் செலவுகளுக்காக, 3-ல் இரு பங்குத் தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவிட நேர்கிறது.
 இதை சரி செய்யும் நோக்கில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், சிசு மற்றும் பிரசவகால மரணங்கள் விகிதம் குறைந்தது. மருத்துவமனையில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்பட்டாலும், இன்னமும் இலக்குகள் பல இருக்கின்றன.
 இதனால், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்த, புதிய தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடங்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
 நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளின் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதற்குப் பதிலாக, 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்கிறது. ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்பதற்குப் பதிலாக, இரு மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையும் இருக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, மத்திய மற்றும் மாநில அரசுகள், குறிப்பாக மாநில அரசுகள் அந்தந்தப் பகுதிகளில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
 மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. மருத்துவக் கல்வி குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இந்நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. கல்வித்தரம் உயர்வதற்கு உதவியாக நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்பும், கல்விக்கூட அமைப்புகளையும் நிறுவ வேண்டியது அவசியம். அதேபோல, பாடத்திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
 கிராமங்களிலும், உள்ளூர் சமுதாயத்தினரோடும் இணைந்து பணியாற்றுவதற்கேற்ப மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நோய்களைக் குணப்படுத்தும் பணியைவிட, நோய்த் தடுப்புப் பணிகளில் தங்களது பங்களிப்பை அதிகம் அளித்து, சமூகப் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டும்.
 இந்திய மருத்துவக் கவுன்சில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதோடு, சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சிகளையும் அனைத்து நிலைகளிலும் இணைத்து வருகிறது.
 நாட்டின் மருத்துவக் கல்வியைப் பலப்படுத்த பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.
 தேவையான இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
 பிரதம மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், போபால், புவனேசுவரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் போன்ற 6 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2012-13ம் கல்வியாண்டிலும், மருத்துவமனைகள் 2013-14ம் கல்வியாண்டு முதலும் செயல்படத் தொங்கும் என எதிர்பார்க்கிறோம்.
 கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைவதற்கான திட்டத்தோடு புதுச்சேரி மாநிலம் செயல்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகிறது. இதற்காக புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறேன். நாட்டிலேயே உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வியில் சிறந்த மையமாக புதுச்சேரி மாநிலம் திகழ அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மேலும், புதுச்சேரி மாநிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வெளிக்கொணர, மத்திய சுற்றுலா அமைச்சகத்தோடு இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும் என்றார்.
 மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் இக்பால்சிங், முதல்வர் என்.ரங்கசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ப.கண்ணன், சுகாதாரத்துறைச் செயலர் பி.கே.பரதன், ஜிப்மர் தலைவர் என்.கே.கங்குலி, இயக்குநர் டி.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


எழுத்தாளர் விந்தன் நினைவு நாள்


         

தமிழிலக்கிய உலகில் அதிகம் பிரபலமாகாத சிறந்த எழுத்தாளர் விந்தன் நினைவு நாள் இன்று. ஆண்டுதோறும் தினமணியில் ஒரு சிறு விளம்பரம் வரும். அவரது படைப்புகள் ஏழை எளிய மக்களை கதை நாயகர்களாகக்கொண்டவை. அவரின் படைப்பாற்றல் வியப்பானது. அவரைப்பற்றி ஒரு நூலை சாகித்ய அக்கதமி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிட்டுளது. அவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இப்பதிவில் இடம்பெறுகிறது.

வாழ்க்கை வரலாறு
             விந்தன் என்னும் கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் வேலை செய்து வந்தார்.
இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.
1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

எழுத்தாளராக

1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.
"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.

திரைப்படவுலகில்

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், "கூண்டுக்கிளி" என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
இறுதிக் காலம்

பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
அவர் மகன் திரு கோ. ஜனார்தனன் விந்தன் நினைவு அறக்கட்டளை நடத்தி வருகிறார்.முகவரி : கோவிந்தாலையா 17(7/2) அருணாசலம் தெரு, செனாய்நகர், சென்னை - 600030. பேசி: 9444145275.
இணயம் கீழுள்ள இணைப்பை சொடுக்குக. ஒருங்குறி எழுத்துருவிலிருன்தால் நலம். விந்தன் 

நன்றி: தமிழ்விக்கிப்பீடியா


Thursday, June 21, 2012

பெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம்



1925 ஆம் ஆண்டு பெரியாருக்கு ராஜாஜி எழுதிய கடிதம். காந்தியின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதம்.

Sunday, June 17, 2012

தொழில்நுட்பக்கல்வி சேர்க்கை புதிய விதிமுறை


பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 வருடம் பாலிடெக்னிக் படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இது நடைமுறையில் உள்ளது.



இப்போது பிளஸ்-2 படிக்கும் போது தொழில்கல்வி படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
         இது ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் என்பதை கண்கூடாக இந்த ஆண்டு நான் கண்டேன். இதை உணர்ந்த வைக்கோ அவர்கள் ஏ.ஐ.சி.டி.இ. ன் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி ஒன்றில் படித்து அப்பள்ளியில் முதல் மாணவனாகத் தேரிய மாணவன் ஏழ்மை நிலை காரணமாக பொறியியல் படிக்காமல் பாலி டெக்னிக் படிக்க நினைத்தான். 2 ஆம் ஆண்டில் சேர முடியாது என்ற அறிவிப்பால் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணைக்கொண்டு இப்போது முதலாண்டு சேரப்போகிறான். இது ஏழைகளின் தலையெழுத்து என்று விட்டு விடாமல் மற்ற அரசியல் தலைவர்களும் இதனை கண்டித்து பழைய நிலை தொடர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வைக்கோ அவர்களை இந்த கண்டன அறிக்கைக்காகப் பாராட்டுவோம்.

நன்றி : தினமணி, கல்விச்சோலை

Saturday, June 16, 2012

தமிழனின் ஊர்ப்பெயர் தமிழில் வேண்டும்



விருத்தாசலம் என்னும் வட மொழிப் பெயரை தமிழில் திருமுதுகுன்றம் என்று மாற்றுவதற்காக 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். இப்போது நல்ல சூழல் நிலவுகிறது. கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் ஆர்வமாக உள்ளனர். அதுகுறித்த வரலாறுகளை காணுங்கள்.


15.12.1993 விடுதலை தலையங்கம்
 திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு அனுப்பிய கடிதம்

 திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டம்
தமிழக அரசு நடுவணரசுக்கு அனுப்பிய கடிதம்
நடுவணரசு எழுத்தாளர் கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்
தமிழக அரசு கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்

 அகநானூற்றில் முதுகுன்றம் என குறிப்பிடும் மாமூலனார் பாடல்
பழமலைநாதர் கோயில் கல்வெட்டு

பழமையான இவ்வூரின் பெயரை மீண்டும் திருமுதுகுன்றம் என மாற்றவேண்டும்.


Tuesday, June 12, 2012

ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு

ஓர் ஆண்டு முழுதும் கற்ற கல்வியை 3 மணி நேரத்தில் மதிப்பிடுவது சரியல்ல என்பது கல்வியாளர்களின் கருத்து. இதனை வலியுறுத்தி 2006 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்தும் "மதிப்பீட்டு முறையில் பன்முகத்தன்மையின் தேவை" என்னும் தலைப்பில் ஆய்வுக்கத்துரை ஒன்றினை அளித்தேன். அக்கட்டுரையில் நான் பரின்துரைத்த ஒரு சில செயல்கள் இன்று தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சிதான் என்றாலும் இன்னும் முழுமையான மதிப்பீட்டு முறை தேவை. என் கட்டுரையின் ஒளி நகல் கீழே காண்க இன்னும் விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.




Tuesday, June 5, 2012

ஏட்டுச் சுரைக்காய்





ஒரு குளத்தில்
நூறு கொக்குகள் இருந்தன
அதில் ஒன்றைச் சுட்டான்
வேட்டைக்காரன்
மீதி எத்தனை
கொக்குகள்
அங்கிருக்கும்?

தொண்ணூற்றொன்பது
என்றனர்
மாணவர்

பூச்சியம்
என்றனர்
ஞானியர்.


நன்றி : படம் - தமிழ்விக்கிப்பீடியா

Monday, June 4, 2012

படிப்பு





எழுதச்சொல்லி
நச்சரிக்கும்
ஆசிரியர்களின்
பிடுங்கல்களிலிருந்து
விடுபட நினைக்கும்
என் மகனின்
நாள்காட்டி முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்

பள்ளி செல்லாமல்
வீதியில் திரியும்
நாய்களின் சுதந்திரம்
தனக்கில்லாதது பற்றி
வருந்துமவனை
உணவு முறையில்
நமக்கும் நாய்க்குமான
வேறுபாடு கூறி
தேற்றுவாள் மனைவி

விளையாட்டு மைதானத்தில்
கழற்றி வைக்கப்பட்ட
மனத்தோடு
பள்ளிக்கு விரட்டப்படும்
அவன் கடிகாரம்
நொண்டியடிக்கும்

உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்குக்
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
பை நிறைய வீட்டுப்பாடம்

விரலிடுக்குகளில்
எழுதுகோலோடும்
விரிக்கப்பட்ட
குறிப்பேடுகளின் மீது
உலர்ந்த கண்ணீர்க் கோட்டு
கன்னங்களோடும்
உறங்கிப் போனவனை
எழுப்பி
ஊட்ட முயல்கையில்
உள்ளிறங்க மறுக்கும்
சோற்றுருண்டைகளும்.

Monday, May 28, 2012

பல்லி பயம்




புதிதாகக் கட்டப்பட்ட
நம் வீட்டில்
நாம் குடியேறுவதற்குள்
வந்து நுழைந்து விடுகின்றன
பல்லிகள்

நாம் முதன்முதலாக
வீடிற்குள் அடி வைக்கும்போது
தம் இருப்பைச்சொல்லி
நம்மை வரவேற்கின்றன

அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கிவிடுகின்றன

அவை
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை
நாம்

யாதொரு பணியையும்
தொடங்கும் முன்
அவற்றின் சம்மதம் வேண்டி
நிற்கிறோம்

நாம் வெளியில் புறப்படும்போது
விபத்தின்றி திரும்ப
ஆசீர்வதித்தனுப்புகின்றன

நமக்கென்று
சில உதவிகளையும் செய்கின்றன

கொசுக்களை உண்டு
நம்மைத்
தொற்று நோய்களிலிருந்து
காப்பாற்றுவதோடு
சிலந்திகளையும் தின்று
ஒட்டடையற்ற
வீடாகவும் பராமரிக்கின்றன

நாமோ
அவை கதவிடுக்குகளில்
இருப்பதைக் கண்டுகொள்ளாமல்
கதவைச் சாற்றி
வால்களைத் துண்டித்துவிடுகிறோம்

துண்டான வால்
துடிப்பதைப் பற்றியெல்லாம்
கவலைப் படுவதில்லை
பல்லிகள்

குட்டை வால்களை
விரைவிலேயே
வளரச் செய்துவிடுகிறார்
பல்லிகளின் கடவுள்

திருமணத்திற்குத் தயாராகிவிடும்
நம் பிள்ளைகளுக்குத்
துணை தேட
பல்லிகளிடம் ஒப்புதல்
கேட்கிறோம்

தன் துணையை
புணர்ச்சிக்கு அழைக்கிறது பல்லி
அழைப்பொலியைச்
சம்மதமாகக் கருதி வெளியேறுகிறோம் நாம்

பெரிதாகிவிட்ட
பல்லிக்குட்டிகளைப் பார்த்து
பயப்படுகின்றனர்
நம் பேரப்பிள்ளைகள்

ஒரு நாள்
கால் இடறி
நம் தலையில் விழுகிறதொரு பல்லி

மரண பயத்தில்
தலை தெரிக்க ஓடுகிறோம்
குளியலறை நோக்கி.

Sunday, May 27, 2012

நிரல்





நாட்டின் எதிர்காலத்தை
கைகளில் ஏந்தி
வரிசையில் நின்றனர் குழந்தைகள்
சத்துணவு கூடத்தின் முன்

சுகாதர நிலையங்களில்
நோயாளிகளின் வரிசை

ரசிகர்கள் கூட்டம்
இப்போது குறைவுதான்
திரையரங்க வரிசையில்

முன் பதிவுக்குக் காத்து நிற்கிறது
பயணிகளின் வரிசை

வளைந்து நெளிகிறது
ரேஷன் கடை வரிசை

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமின்றி
அவ்வப்போது தோன்றும்
வாக்காளர் வரிசை

பொங்கல் தோறும்
விலையில்லா வேட்டி சேலைக்கு நிற்கிறது
ஏழைகள் வரிசை

இந்நாட்டு மன்னர்களெல்லாம்
ஏதோ ஒரு
வரிசையில் நிற்க

எதிர்கால மன்னர்களோ
கைரேகைப் பதிவிற்காக
காத்து நிற்கின்றனர்
அமெரிக்க தூதரகத்தின்
நீண்ட வரிசையில்.

Saturday, May 26, 2012

பிணத்தை உண்பவன்



பூமிக்குள் புதைக்கப்பட்ட
நம் மூதாதையர்
ஒருவரைப் போல்
காட்சியளிக்கிறது
மண்ணுக்குள்ளிருந்து
தோண்டியெடுக்கப்பட்ட
சக்கரைவள்ளிக்கிழங்கு

தணலுக்குள் 
நுழைத்து வைத்து
மறுநாள் 
எடுத்துப் பார்க்கிறேன்

வெந்து சுருங்கிய உடலை
என் கோரைப் பற்கள்
நீண்டு வெளிவர
பிய்த்து உண்கிறேன்

எனக்கு மிகவும் விருப்பமான
என் மூதாதையரின்
வெந்த பிணத்தை.

Thursday, May 24, 2012

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்-நூல் அறிமுகம்





                                      தென்னவராயன்பட்டு வேணுகோபால்



                 அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் வாழ்த்துரை







தென்னவராயன் பட்டுஇராமசாமி, விடுதலைப்போராட்ட வீரர் வேணுகோபாலசாமி அவர்களின் , நல்லாசிரியர் சஞ்சீவிராயன் ஆகிய மூன்றுதலைமுறை வரலாற்றை பேராசிரியர் த. பழமலை அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலுக்கு அறிமுகவுரை எழுதியுள்ள அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் பல வரலாற்று உண்மைகளையும் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் பெயரால் எப்படியெல்லாம் ஒடுக்கினர் என்பதையும் அதற்கு எதிராக தந்தை பெரியார் ஆற்றிய தேர்தல் பணிகள் பற்றியெல்லாம் வெகுசன வரலாற்றில் அதிகம் பேசப்படாத செய்திகளை ஆனைமுத்து அவர்கள் இங்கே பதிவுசெய்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஆதிதிராவிடர்களும் வன்னியர்களும் இணைந்து தேர்தல் களம் கண்டு வெற்றிபெற்ற செய்திகள் இன்றைக்கு பாடமாக அமைகின்றன.
இந்த நூலைத் தொகுத்துள்ள பேராசிரியர் பழமலை அவர்கள் கடின உழைப்பு செய்திகளில் மிளிர்கிறது. அவர் முன்னுரையில்,"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வழங்கும் நம்முடைய பண்டைநாள் நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டவையே அந்நாளில் அவற்றைத்தொகுத்தவர்கள் பட்ட அரும்பாட்டை இன்று நாம் நினைத்துப் பார்க்கவும் இயலாது. நம் கற்பனைக்கும் எட்டாது. இந்நாளில், இந்நூலைத் தொகுக்கையில் அடியேன் பட்ட பாடு அவர்கள் கடின உழைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இருக்கலாம். இதுதான் ஆசை பற்றி அறையலுற்றேன் என்பது". என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்
பக்கங்கள் : 192
விலை : ரூ.100/-
கிடைக்குமிடம் : மலையரசன் பதிப்பகம்
தென்னவராயன் பட்டு
வாக்கூர் அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் - 605501.

Wednesday, May 23, 2012

தபசி கடிதம்...









திருச்சி
11-02-2006

அன்பு நண்பர் புகழேந்திக்கு,
நலமா? நகர்க்குருவி வாசித்துவிட்டேன். இயல்பான எளிமையான பல கவிதைகள் அளித்துள்ளீர்கள்.. வாசிப்பு நெருக்கடி இன்றி கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.ந்வீன கவிதைகளில் இது ஒரு பிரதான அம்சமாக மிளிர்வதை அறிந்திருப்பீர்கள். இன்றைய கவிதை மொழியில் புதிர்கள் எதுவுமில்லை என்பதே அதன் பலம். அதே சமயம், கவிதைக்குள் ஒரு வித மாயாவாத வெளிப்பாட்டைக்கொண்டுவர முடியும். காட்சிப்பதிவுகளின் வழியே கருத்துப்பதிவின் நுண்ணிய இடங்களை கவிஞன் தொட்டுவிட முடியும். கவிதை நகர்வு, கவிதையைவிட முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். நூலகத்திலிருக்கும் புத்தக அடுக்கு போல, ஒரு இசைக்குறிப்பு போல, ஒரு தேர்ந்த வாகன ஓட்டியின் சாகசம் போல கவிதையை நகர்த்திச் செல்ல முடியும். ஒரு நல்ல கவிதை தன் மையத்தை ஒரு நாளும் இழப்பதில்லை. அது எப்போது எழுதப்பட்டதாக இருப்பினும் சரி அது இன்று மலர்ந்த பூவாகத்தான் மணம் வீசும்.
இழப்புகள் சுமைகள் இவைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் மன்க் கொந்தளிப்பைத் தங்களின் பல கவிதைகளில் உண்ர்கிறேன். கவிஞனுக்கே உரித்தான nostalgic மன நிலையும் கூட. ' நடப்பது என்பது நடந்தது ஆகிவிட்டது' , 'பூமிக்குள் புதைக்கப்பட்ட நம் மூதாதையர்...', ' என் மகனின் நாள்காட்டி முழுக்க ஞாயிற்றுக்கிழமைகள்' ஆகிய வரிகளில் a touch of class உள்ளது. அதே சமயம் . ' அன்றெ தொடங்கினேன் சமையல் கலையை மறந்து போக..' என்பது apt ஆகத் தெரியவில்லை. 'சமையலறையில் இனி எனக்கென்ன வேலை என்று இருக்கலாமோ அது? கவனிக்கவும். ஒரு கவிதையில் அதிகப்படியான சொற்களைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் பொருத்தமற்ற சொற்கள் இருக்கலாகாது என உணர்கிறேன். கவிதையின் மீதான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்தும்போது, ' சொல் தேர்வு' மற்றும் சொற்பொருத்தம் கை கூடிவிடும். உதாரணமாக என்னுடைய பூனைகளின் காலம் என்ற கவிதையில் புனுகுத்தைலம் என்ற ஒரு சொற்றொடருக்கு சுமார் 6 மாத காலம் நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. இறுதியில் அதுவாகவே நிகழ்ந்தது. உக்கிரமான மன நிலையில் இயங்கும்போது அங்கு மேலோட்டமான சொற்கள் வலுவிழந்து விடுகின்றன. தொடர்ந்து அப்படிப்பட்ட மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வதுதான் அரிதானது. மற்றபடி தொடர்ந்து எழுதுங்கள். கவிதையின் வடிவம் செய்நேர்த்தி ஆகியவை பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை மட்டுமே சொல்லுங்கள். வடிவமும் செய்நேர்த்தியும் தம்மால் வந்துவிடும். கவிதை என்பது கையில் பிரம்பை வைத்துக்கொண்டு நம்மைப் பயமுறுத்தும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் அல்ல. அது நம் வீட்டு நாய்க்குட்டி அது நம்மைக் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி தங்களின் 'வித்தைக்காரி', 'நாற்றமில்லாத...', 'நடந்த கதை' ஆகிய கவிதைகளை ரசித்துப் படித்தேன். அனைத்திற்கும் எழுதுங்கள்.

அன்புடன்
தபசி.

Sunday, May 20, 2012

மெய்ப்பொருள் காண்பது அறிவு - நூல் அறிமுகம்

விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் செழியன் எழுதிய மெய்ப்பொருள் காண்பது அறிவு என்னும் நூல் என் அணிந்துரையோடு வெளியாகியுள்ளது. என் அணிந்துரையில் வரும் முதல் நூல் இது. உங்களோடு பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி...





நூல் பெறுவதற்கு




பாவாணர் இல்லம்
கபிலர் தெரு
பெரியார் நகர் - தெற்கு
திருமுதுகுன்றம் - 606001.
பேசி : 9362665443.

Tuesday, May 15, 2012

உலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு - டிசம்பர் 2012




உலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 15,16 தேதிகளில் சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டினைத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது. இதர்காகத் தமிழறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்புகள்

1.தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைகள்
2. தமிழ் மொழி பாடப்பொருள் - காலத்திற்கேற்றவை
3. மனனம் செய்து கற்றல் மூலம் விளையும் பயன்கள்
4. தமிழ் மொழியின் எதிர்காலம்
5. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா?
6. தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகள்
7. பிற மொழி மாணவர்கள் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்
8. தமிழ் மொழித்திறன் வளர்ப்பு - வழிவகைகள்.
9. தமிழ் வளர்த்த அறிஞர்கள்
10. ஆசிரியப்பணி அறப்பணி

 கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் வழங்கும் வண்ணம் அமைதல் வேண்டும்.

முழு வடிவில் கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் : 30/08/2012

பேராளர் கட்டணம் : ரூ.5000/-

கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி

ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
78, பெல்சு சாலை
சென்னை - 600005.
பேசி : 044-28510575
மின்னஞ்சல் : testf@asiriyarkoottani.org
இணையதளம் : www.tamilkalam.in



Friday, April 13, 2012

பன்னாட்டு கருத்தரங்க அறிவிப்பு



 பன்னாட்டு கருத்தரங்க அறிவிப்பு

                                                            பதிவுப்படிவம்

பேராயர் கால்டுவெல் ஆய்வு நடுவம்

இடம் :இடையான்குடி, திருநெல்வேலி மாவட்டம்,
             தமிழ்நாடு - 627 651. பேசி 9677506890.
     மின்னஞ்சல் : jeyaselvinc@gmail.com

நாள் : மே 6&7,2012.

தமிழ், சமயம், வரலாறு, திரவிடம்,மொழிபெயர்ப்பு ஆகிய நடுக்கருத்துகளில் ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பலாம்.

கட்டுரைகள் சேரவேண்டிய நாள்: 20.04.2012.

பதிவுக்கட்டணம் : ரூ.400.ஆய்வு மாணவர்களுக்கு ரூ.200.வரைவோலை - Bishop caldwell Research Centre,payable at                        Indian Overseas Bank,Kuttam.

கட்டுரை அனுப்ப:  முனைவர் ஜெயசெல்வின்,
அமைப்புச்செயலர்,
2F1,ஜி&எச், சுந்தரி அடுக்ககம்,
2ஆம் தளம்,
மேற்கு லுத்தரன் சாலை,
  நாகர்கோயில் - 629001.
பேசி : 9677506890.
மின்னஞ்சல் : jeyaselvinc@gmail.com