தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 10, 2012

கொசுக்களை உற்பத்தி செய்யவா நகராட்சி?




புகாருக்குப் பின் தங்கம் நகரில் திரு பூராசாமியின் காலி மனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்


புகாருக்கு முன் சாலையில் வழிந்தோடிய கழிவு நீர்.

விருத்தாசலம் பெரியார் நகரும் தங்கம் நகரும் அருகருகே அமைந்துள்ள புறநகர்ப் பகுதிகள். பெரியார் நக்ரின் முதன்மைச்சாலையான அண்ணாசாலையானது கடலூர் சாலையையும் சிதம்பரம் சாலையையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலையாகும். இச்சாலை தங்கம் நகர் வழியாகத்தான் செல்கிறது.ஆனால் சுமார் 30 அடி நீளம் இணைப்புச்சாலை அமயவேண்டிய இடத்தில் திரு. பூராசாமி என்பவரின் காலி மனை உள்ளது.குடியிருப்போர் நலச்சங்கங்கள் அவரிடம் பேசி இணைப்புச் சாலை அமைக்கத்தேவையான இடத்தினை நகராட்ச்சிக்கு தானமளிக்கச் செய்தோம். நகராட்ச்சிக்கு சாலை அமைக்கத் தனது வீட்டுமனையில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதில் சாலையும் அமைக்கப்பட்டது. இந்த இணைப்புச்சாலைக்கு வடக்கிலும் தெற்கிலும் கழிவு நீர்க் கால்வாய் உள்ளன. அவை இரண்டு கால்வாய்களையும் இணைத்தால்தான் கழிவு நீர் சாலையில் ஓடாமல் கால்வாயில் ஓடும். இக்கோரிக்கையினை இடத்தை தானம் செய்த போதே அப்போதைய நகராட்சி ஆணையர் திரு. திருவண்ணாமலை அவர்களிடம் முன் வைத்தோம். முதலில் சாலை அமையட்டும் அடுத்து கால்வாய் அமைக்கலாம் என கூறியவர் மாறுதலாகி சென்று விட்டார். அதன் பிறகு பொருப்புக்கு வந்தவர்களுக்கு இந்த வரலாறு தெரியவில்லை. காலங்கள் ஓடின கால்வாய் அமைக்காததனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது .இது குறித்து பல முறை புகாரளித்தோம். நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவே வேறு முயற்சியில் இறங்கினோம். மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என எல்லா இடத்திலும் புகார் கொடுத்தோம் செய்தித்தாளில் இது பற்றி செய்தி வெளிவந்தது. நகராட்சியிலிருந்து பார்வையிட்டு சாலையில் வழிந்தோடிய சாக்கடை நீரை இணைப்புக் கால்வாய் அமைத்து தங்கம் நகர் கால்வாயில் விடுவார்கள் என்று நினைத்தோம். யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிவினை நகராட்சி நிர்வாகம் எடுத்தது.அந்த முடிவுதான் சாலைக்கு இடம் தந்த பூராசாமியின் காலிமனையில் சாக்கடையை விட்டு நிரப்புவது .அதன் மூலம் கொசுக்களை உற்பத்தி செய்து மக்களுக்கு தொற்று நோயைப் பரப்புவது.முதலமைச்சர் தனிப்பிரிவுக்கா புகார் செய்தீர்கள் உங்களுக்கு இதுதான் தண்டனை.என்பது போல் உள்ளது நகராட்சியின் செயல்பாடு.
ஐயா அதிகாரிகளே பொது மக்களுக்கு நீங்கள் செய்யும் தொண்டு இதுதானா? ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் வசிக்கும் பகுதிக்கு உடனே சாலை அமைக்கின்றீர்கள் கழிவு நீர்க் கால்வாயும் அமைக்கிறீர்கள்.அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இதுபோல் கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறீர்களே இது நியாயமா?  சாலைக்கு இடம் தந்தால் சாக்கடைதான் பரிசா?


Friday, December 7, 2012

கணையாழி விமர்சனக்கூட்டம்


கணையாழி விமர்சனக்கூட்டம்



நாள் : 9.12.12 காலை 10.00 மணி

இடம் : வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பூதாமூர்,   விருத்தாசலம்.

வரவேற்பு : இரத்தின புகழேந்தி

முன்னிலை : கோ.பாக்யராஜ்

தலைமை : இமையம்

விமர்சனம் : கரிகாலன், ரவிகார்த்திகேயன்,செந்தில்வேலன், அசதா, காலபைரவன், அமலநாயகம், தேவராஜ், அமிர்தராஜ், அண்ணாதுரை.

சிறப்புரை : ம.இராசேந்திரன் ஆசிரியர் கணையாழி,(மு) துணைவேந்தர்,த.ப.க., தமிழ் வளர்ச்சித்துரை இயக்குநர்.

நன்றியுரை : கனகராஜ்

நிகழ்ச்சி ஏற்பாடு : திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம்.

அனைவரும் வருக