தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, July 19, 2017

ஆசிரியராகும் மாணவர்கள்! வகுப்பறையில் புதுமை புகுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools



ஆசிரியராகும் மாணவர்கள்! வகுப்பறையில் புதுமை புகுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools
வி.எஸ்.சரவணன்
ஆசிரியர் சர்வாதிகாரி. மாணவர் அடிமை. ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். மாணவர் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு வகுப்பறை இருக்குமானால் அது நிஜமான வகுப்பறை அல்ல. அப்படியான சூழலில் கற்பிக்கப்படுவது கல்வியுமல்ல" என்று எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். வகுப்பறையில் ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும் என்பதையே இந்த வரிகள் சுட்டுகிறது. அதைத் தன் வகுப்பில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரத்தின புகழேந்தி
விருத்தாச்சலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்தான் ரத்தின புகழேந்தி. கணக்கு என்றாலே அஞ்சுகிற மாணவர்களையும் விளையாட்டு முறையில் பாடம் நடத்தி, கணக்குப் பாடத்தையும் எளிமையாக்கி விடுபவர்
மதிய உணவுக்குப் பிறகான முதல் வகுப்பு என்றாலே ஆசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். அதுவும் இவர் கணித ஆசிரியர். ஆனால், இவரின் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். வகுப்பறையில் புதிய விஷத்தையும் புகுத்தியிருக்கிறார். அதுகுறித்து ஆசிரியர் புகழேந்தியிடம் கேட்டோம்


ஆசிரியர் சர்வாதிகாரி. மாணவர் அடிமை. ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். மாணவர் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு வகுப்பறை இருக்குமானால் அது நிஜமான வகுப்பறை அல்ல. அப்படியான சூழலில் கற்பிக்கப்படுவது கல்வியுமல்ல" என்று எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். வகுப்பறையில் ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும் என்பதையே இந்த வரிகள் சுட்டுகிறது. அதைத் தன் வகுப்பில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரத்தின புகழேந்தி.

விருத்தாச்சலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்தான் ரத்தின புகழேந்தி. கணக்கு என்றாலே அஞ்சுகிற மாணவர்களையும் விளையாட்டு முறையில் பாடம் நடத்தி, கணக்குப் பாடத்தையும் எளிமையாக்கி விடுபவர்.

மதிய உணவுக்குப் பிறகான முதல் வகுப்பு என்றாலே ஆசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். அதுவும் இவர் கணித ஆசிரியர். ஆனால், இவரின் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். வகுப்பறையில் புதிய விஷத்தையும் புகுத்தியிருக்கிறார். அதுகுறித்து ஆசிரியர் புகழேந்தியிடம் கேட்டோம்.


வகுப்பறை என்பது மாணவர் - ஆசிரியர் உரையாடுவதற்கான இடமாகத்தான் நான் பார்க்கிறேன். அப்படி உரையாடும்போது கற்றல் சீராக நடக்கும். மதிய உணவுக்குப் பிறகு வகுப்பு என்பதால் தொடங்கும்போதே, மாணவர்களுக்குப் பிடித்த வண்ணமாக அந்த வகுப்பு மாறியிருக்க வேண்டும். அப்படி என்ன செய்யலாம் என்பதற்கான யோசனைதான் ஆசிரியராகும் மாணவர்கள்.

எங்கள் வகுப்பைத் தொடங்கி வைப்பது மாணவர்கள்தாம். தினமும் ஒரு மாணவர், ஆசிரியராக மாறிவிடுவர். நான் மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்துகொள்வேன். அன்றைய தினத்திற்கான ஆசிரியராகும் மாணவர் வகுப்புக்குள் வந்ததும் எல்லோரும் எழுந்துநின்று வணக்கம் சொல்வோம். முதன்நாள் நான் நடத்திய பாடத்தின் ஒரு பகுதியை அந்த மாணவர் நடத்துவார். அப்போது மாணவர்கள் சந்தேகங்களை எழுப்புவார்கள். அதற்கு என் உதவியின்றிப் பதில் அளிக்க வேண்டும். சில நேரங்களில் நானும் சந்தேகங்களைக் கேட்பேன். பிறகு, நன்றி கூறி விட்டு தன் இருக்கையில் அமர்வார். தினமும் 10 நிமிடத்துக்கு இது நடக்கும். இதுவும் ஒருவகையில் கற்றலுக்கான பயிற்சிதான்.

இந்தப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி நிச்சயம் எழும். நாளைய ஆசிரியர் இவர்தான். பாடத்தின் இந்தப் பகுதியைத்தான் நடத்தப்போகிறார் என்று சொன்னதுமே அந்த மாணவன் அந்தப் பாடத்தைத் தெளிவாகப் படிப்பதோடு, யாரேனும் சந்தேகம் எழுப்பினால் எப்படி அதைத் தீர்ப்பது என்பதையும் யோசித்து அதற்கான பதில்களையும் தயார் செய்துவருகிறான்.

அடுத்த நாள் வகுப்பில் ஆசிரியர் உள்பட அனைவருமே தன்னைக் கவனிக்கப் போகிறார்கள் என்கிற எண்ணம் அவன் மனதில்  ரத்தின புகழேந்திஉருவாகிறது. அதனால் தன் உடை, பாவனைகளை நேர்த்தியாக்கிக்கொள்கிறான். வார்த்தைகளை நிதானமாக்கிப் பேசுகிறான். பாடத்தில் யாரேனும் சந்தேகம் எழுப்பினால், அதைத் தீர்த்து வைக்கிறபோது அந்தப் பாடம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. பாடம் அல்லாத கேள்விகளையும் மற்ற மாணவர்கள் அவனிடம் கேட்பதுண்டு. அதைச் சமாளிக்கும் திறனும் அவனுக்கு வளர்கிறது.

ஒரு புதிய விஷயத்தைக் கையாளும்போது, அவனின் ஆளுமைத் திறனும் கூடிக்கொண்டே செல்லும். வகுப்பில் தனித்துத் தெரிய வேண்டும் எனும் ஆவலை அதிகரிக்கச் செய்யும். இவனைப் போலவே தானும் நடந்துகொள்ள வேண்டும் எண்ணம் மற்ற மாணவர்களுக்கும் உருவாகும். அதனால்தான் வகுப்பை முடிக்கும்போது மறக்காமல் அடுத்த நாள் ஆசிரியராகும் மாணவர் யார் என்பதைக் கேட்டுக்கொள்வார்கள். மறுநாள் நானே மறந்தாலும் அந்த மாணவர் எழுந்துவந்து விடுவார்.
வெளிப்படையாகக் கூறுவது என்றால், இந்தப் பயிற்சியின் மூலம் எனக்குப் பல புதிய விஷயங்கள் தெரிந்துள்ளன. முதன்நாள் நான் நடத்திய பாடத்தை அவர்கள் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். சில பாடப் பகுதிகளை என்னை விட சிறப்பாக அவர்கள் நடத்தும்போது பிரமிப்பாக இருக்கும். அவர்களில் முத்தமிழ் அரசி, அமுல்ராஜ், மானூசா போன்றோர் என்னை ஈர்த்தவர்கள்.
இவை எல்லாவற்றையும் விட, ஒரு வகுப்பின் ஆசிரியர்தான் எனும் பெருமிதம் அவர்களின் முகத்தில் மின்னும். அது அவர்களின் கற்றலை இன்னும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன். மாவட்ட அளவில் நான் ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்போது அங்கு இந்தப் பயிற்சியைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறேன்." என்று கூறுகிறார் ரத்தின புகழேந்தி. இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிராமிய விளையாட்டுகள் பற்றிய இவரின் நூல் சிறப்பான வரவேற்பு பெற்றது. சுட்டி விகடனின் எஃப் பகுதியில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

நன்றி: ஆனந்தவிகடன்
http://www.vikatan.com/news/tamilnadu/96039-students-are-becoming-teachers-a-government-school-teacher-s-new-perspective.html#vuukle_div

No comments:

Post a Comment