தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, August 19, 2017

கானல்வரி இலக்கிய விழா 2017

 இது குழந்தைகளின் வகுப்பறை என்ற நூலை முனைவர் பட்டி சு.செங்குட்டுவன் வெளியிட மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
 பந்தயக்குதிரைகளா மாணவர்கள் என்னும் நூலை கே.எஸ்.ஆர்.பள்ளி தாளாளர் கோ.சுந்தரவடிவேல் வெளியிட முதுகலை ஆசிரியர் நா.இரமேஷ்பாபு பெற்றுக்கொண்டார் 
 இரத்தின புகழேந்தி தொகுத்த சனங்களின் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூலை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் வெளியிட மருத்துவர் சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார்,
போட்டியில் தேர்வுபெற்ற சிறுகதைத்தொகுப்பு  வசீரும் லீலாவதியும் என்னும் நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட பொறியாளர் த.தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
 முனைவர் இரா.செந்தில்குமார் எழுதிய தமிழரின் கைவினைக்கலைகள் என்னும் நூலை ஓவியர் கே.கோவிந்தன் வெளியிட ஊடகவியலாளர் ரெங்கப்பிள்ளை பெற்றுக்கொண்டார்
 முதல்பரிசுபெற்ற எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழைம் 5000 ரூபாய் பரிசுத்தொகையையும் எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களின் மகன் ச.அகிலநாயகம் வழங்கினார்.
 மூன்றாம் பரிசு அரியலூர் சி.கருணாகரசு அவர்களின் சார்பில் அவர் மகன் இளங்கதிருக்கு நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார்.


கானல்வரி இலக்கியவிழாவை இளவேனில் பதிப்பகம் சார்பில் நிகழ்த்தினோம். ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவும் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும்  விருத்தாசலம் பெரியார் நகர் புறவழிச்சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் பள்ளியில் 15.8.2017 மாலை நடைபெற்றது.
நீதிபதி ப.உ.செம்மல் தலைமையில் நடைபெற்ற விழாவில் இரத்தின புகழேந்தியின் இது குழந்தைகளின் வகுப்பறை என்ற நூலை முனைவர் பட்டி சு.செங்குட்டுவன் வெளியிட மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார். இரத்தின புகழேந்தி தொகுத்த சனங்களின் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூலை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் வெளியிட மருத்துவர் சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார், பந்தயக்குதிரைகளா மாணவர்கள் என்னும் நூலை கே.எஸ்.ஆர்.பள்ளி தாளாளர் கோ.சுந்தரவடிவேல் வெளியிட முதுகலை ஆசிரியர் நா.இரமேஷ்பாபு பெற்றுக்கொண்டார் போட்டியில் தேர்வுபெற்ற சிறுகதைத்தொகுப்பு  வசீரும் லீலாவதியும் என்னும் நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட பொறியாளர் த.தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
முனைவர் இரா.செந்தில்குமார் எழுதிய தமிழரின் கைவினைக்கலைகள் என்னும் நூலை ஓவியர் கே.கோவிந்தன் வெளியிட ஊடகவியலாளர் ரெங்கப்பிள்ளை பெற்றுக்கொண்டார்
சிறுகதைப் போட்டியில் முதல்பரிசுபெற்ற எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழைம் 5000 ரூபாய் பரிசுத்தொகையையும் எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களின் மகன் ச.அகிலநாயகம் வழங்கினார். இரண்டாம் பரிசு தஞாவூர் ஹரணி அவர்களுக்கு முனைவர் இரத்தின புகழேந்தி வழங்கினார். மூன்றாம் பரிசு அரியலூர் சி.கருணாகரசு அவர்களின் சார்பில் அவர் மகன் இளங்கதிருக்கு நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார். வெ.க.இராஜேந்திரன் , கவிஞர் ஆறு.இளங்கோவன், சி.சுந்தரபாண்டியன், ஆ.மலர்தாசன், வி.ரொசாரியோ, பூ.இராஜேந்திரன்,கோ.செங்குட்டுவன்,கு.கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரிசுபெற்ற எழுத்தாளர்களின் சார்பில் நெய்வேலி பாரதிக்குமாரும், நூல்வெளியீட்ட எழுத்தாளர்களின் சார்பில் முனைவர் இரா.செந்திகுமாரும் ஏற்புரையாற்றினர்.

முனைவர் இரத்தின புகழேந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment